பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களா? – மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர்

முப்படையினரை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முப்படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைப்பதற்கு அரசாங்க பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத்தினரின் தனிமைப்படுத்தலுக்காக பாடசாலைகளை பயன்படுத்தவில்லை என்றும், இருப்பினும் மேலதிக முகாமாக பாடசாலை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!