சீனாவில் பயணிகளை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட பேருந்து ஓட்டுனர்!

சீனாவில் பேருந்து ஓட்டுனர் ஒருவருக்கு திடீரென்று ஆஸ்துமாவால் அவதிப்பட்டதால், பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Guizhou மாகாணத்தின், Weng’an கவுண்டியை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் Hu Kui கடந்த 11-ஆம் திகதி பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அவர் ஆஸ்துமாவால் அவதிப்பட்டுள்ளார்.

இதனால் அவர் தாம் மயக்கமடைவதற்குள் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றியுள்ளார்.

அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த இவரை, மகனான Hu Yunfeng-க்கு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். ஆனால் அங்கு இவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து Hu Yunfeng கூறுகையில், உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று என்னுடைய தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து நான் அங்கு வருவதற்குள் என்னுடைய தந்தை மயக்க நிலையில் கிடந்தார்.

அவர் தன்னுடைய வாழ்க்கையிலும், அவரது வேலையிலும் மிகவும் பொறுப்பான நபராக இருந்தார். அவரும் வேலை செய்வதை நிறுத்த முடியாத நபராக இருந்தார். தனது வாழ்க்கையின் முடிவில் கூட, அவர் மற்றவர்களுக்கும் தனது நிறுவனத்துக்கும் தன்னால் முடிந்ததைச் செய்துள்ளார். அவரை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!