இரட்டை நிலைப்பாட்டு கூட்டத்திற்கு செல்ல மாட்டோம்!

பிரதமரினால் எதிர்வரும் 4ம் திகதி கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அக்கட்சி,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் என்று கூறிய அதேவேளை பழைய நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பைக் கோரும் பிரதமரின் இந்த அறிவிப்பில் இரட்டை நிலைப்பாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!