இணைத்தள ஆசிரியரை நாடு கடத்துமாறு சிறிலங்கா அதிபர் கோரவில்லையாம்

லங்கா இ நியூஸ் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு பிரித்தானியத் தூதுவரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கோரினார் என்று வெளியான செய்திகளை அதிபரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றில் வெளியான இந்தச் செய்தி பொய்யானது என்றும், சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசுடனான சந்திப்பு மற்றும், லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடு கடத்துவது அல்லது கைது செய்வது பற்றி வெளியான செய்திகள் பொய்யானது என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!