கொரோனா குறித்த தகவல்களை சீனா மறைத்ததற்கான காரணத்தை வெளியிட்ட அமெரிக்க உளவுத்துறை!

கொரோனாவின் தீவரத்தை சீனா மூடிமறைத்ததாக நம்பும் அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள், அவர்கள் அப்படி செய்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய நிலையில் சீனா வேண்டுமென்றே நோயை பரப்பியதாகவும், நோய் குறித்த தகவல்களை மூடி மறைத்ததாக அமெரிக்கா தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் கொரோனா வைரஸ் தீவிரத்தை மற்றும் அதன் தொற்றுநோய் தன்மையை சீனா மூடிமறைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். அமெரிக்க உளவுத்துறை ஆவணங்களின்படி, கொரோனாவை எதிர்த்து போராட தேவையான மருத்துவ பொருட்களை சேமித்து வைக்கவே சீனா தகவல்களை வெளியிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனத் தலைவர்கள் ஜனவரி தொடக்கத்தில் உலகத்திடமிருந்து தொற்றுநோயின் தீவிரத்தை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர் என்று மே 1 திகதி அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொற்றுநோய் தொடர்பாக சீனா மீதான விமர்சனத்தை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!