ஜனாதிபதி கோட்டாபயவிற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்! எச்சரிக்கும் தம்பர அமில தேரர்

நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனநாயகமாக செயற்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், ஜனாதிபதிக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் எனவும் தம்பர அமில தேரர் கூறியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இணையத்தளம் வழியாக செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகளை சட்டரீதியாக மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை எந்த வகையிலும் மீண்டும் கூட்டப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்து வருகிறார்.

எனவே பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்காவிட்டால், அவருக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!