நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக 8 மனுக்கள் தாக்கல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச நாடாளுமன்றத்தைக் கலைத்தமை மற்றும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தமை ஆகியவற்றுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் நேற்று எட்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை, பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன் மற்றும் ஏழு பேர் தனியாகவும், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தனியாகவும், பிறிதொரு தரப்பு தனியாகவும் நேற்று உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இதேபோன்று ஐந்துக்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மனுக்களும் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மனுக்கள் வரும் 11ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!