பிரித்தானியாவில் குழந்தை பெற்ற சிலமணி நேரத்தில் மனைவியை துஷ்பிரயோகம் செய்த கொடூர கணவன்!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரங்களில் கணவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், தற்போது அவர் இந்த ஊரடங்கு காரணமாக வீட்டியில் துஷ்பிரயோக நபர்களிடமிருந்து தப்பிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். Natasha Saunders என்ற பெண், தன்னுடைய கணவரை சந்தித்த போது அவருக்கு வெறும் வயது 17 தான், இப்போது Natasha Saunders-விற்கு 31 வயது, கணவரை பிரிந்து வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்து இவர், கணவனால் 8 ஆண்டுகளாக தான் அனுபவித்த சித்ரவதை குறித்து கூறியுள்ளார்.

நான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் மோசமாக இருந்தேன். நான் என்னுடைய திருமணத்தின் ஆரம்பத்தில் மற்றவர்களைப் போன்று ஒரு வித எண்ணத்தில் இருந்தேன். ஆனால், நான் திருமணம் செய்தவன், கட்டுப்பாடுகளை விதிக்கும் அரக்கனாக இருந்தான். எட்டு ஆண்டுகளாக, நான் துஷ்பிரயோகம் செய்யும், ஒரு நபருடன் வாழ்ந்தேன். வேலைக்கு செல்ல தடை செய்யப்பட்டேன். நிறைய சித்ரவதைகளை அனுபவித்துள்ளேன். என்னை பலாத்காரம் செய்யும் அவர், மறுநாள் எதுவுமே நடக்காதது போல் சாதரணமாக இருப்பார்.

இதில் குறிப்பாக நான் கூற வேண்டும் என்றால், நான் குழந்தை பெற்றெடுத்த போது, (இப்போது அவனுக்கு வயது 7 ஆகிறது), அடுத்த சில மணி நேரங்களில் கொஞ்ச்ம் கூட மனிதாபிமானம் இல்லாமல், அந்த கொடூர கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். நான் தடுக்க முயற்சித்தால், என் குழந்தைகளை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். அப்போது தையல் போடப்பட்டிருந்தது. அந்த வலி என்னால் இப்போதும் மறக்க முடியவில்லை. தொடர்ந்து 8 வருட துஷ்பிரயோக போராட்டத்தில் இருந்து விடுபட, கடந்த 2015-ஆம் ஆண்டு அகதிகளின் தேசிய உள்நாட்டு துஷ்பிரயோக உதவி எண்ணை அழைத்தேன்.

அப்போது அதில் பேசிய பெண் , என்னுடைய துயரங்களை கேட்ட பின், நான் தனியாக இல்லை என்று நினைவூட்டினார். நான் விரும்பினால் வெளியேறலாம் என்று கூறினார். அதன் பின் நான் என் கணவர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். இதையடுத்து அவர்களின் ஆதரவோடு என் வாழ்க்கை மீண்டும் வாழ்த் துவங்கினேன். Natasha Saunders-வின் கணவர் பொலிசாரின் விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது தன்னுடைய புதிய கணவனின் பெயர் பென் எனவும் அவருடன் பாதுகாப்பாக இருப்பதாக கூறும் இவர், தங்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்ததாக கூறியுள்ளார்.

இதை இப்போது Natasha Saunders கூறுவதற்கு முக்கிய காரணம், இந்த ஊரடங்கு நேரத்தில் ஏராளமான பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் நபர்களுடன் வாழ்க்கை வாழ்ந்து வரலாம், இதனால் அவர்களுக்கு இப்படி ஒன்று இருக்கு அதில் இருந்து நாம் வெளியே வர முடியும் என்பதை தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார். ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததிலிருந்து சில உள்நாட்டு துஷ்பிரயோக அமைப்புகள் தொலைபேசி மற்றும் ஆன்லைனில் உதவி கோரும் முறையீடுகளில் 50 சதவீதம் உயர்ந்துள்ளன என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!