அங்கஜன் உள்ளிட்ட 7 புதிய அமைச்சர்கள் – இந்து சமய விவகாரம், முஸ்லிம் அமைச்சரிடம்

இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இன்று முற்பகல் பதவியேற்றனர்.

சற்றுமுன்னர், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக லக்கி ஜெயவர்த்தன பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை, பிரதி அமைச்சர்களாக, ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அஜித் மன்னம்பெரும – சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்.

அங்கஜன் இராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்

காதர் மஸ்தான் – மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, இந்து சமய விவகார பிரதி அமைச்சர்.

எட்வேர்ட் குணசேகர – உள்நாட்டு விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்.

நளின் பண்டார – பொது நிர்வாகம் முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர்

இவர்களில், அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். ஏனைய ஐவரும், ஐதேகவைச் சேர்ந்தவர்கள்.

கிறிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சராக, பௌத்தரான ரஞ்சித் அலுவிகாரவும், இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!