தற்கொலை செய்துகொண்ட வாலிபர்: சிறுநீரை குடிக்க வற்புறுத்தியதால் நேர்ந்த விபரீதம்!

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சஜோர் என்ற கிராமத்தைச் சேர்ந்ந வாலிபர் விகாஸ் ஷர்மா (வயது 20). இந்த வாலிபர் கோயிலுக்கு தண்ணீர் பிடிப்பதற்காக தெருவில் உள்ள கைப்பம்பு இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். கைப்பம்பில் குடத்தை வைத்து தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கும்போது, அருகில் உள்ள குடத்தில் தண்ணீர் பட்டதாக தெரிகிறது. இதனால் மனோஜ் கோலி தனது சகோதரிகள் தரவாதி கோலி, பிரியங்கா கோலி ஆகியோருடன் சேர்ந்து விகாஸ் ஷர்மாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் விகாஸ் ஷர்மா வைத்திருந்த குடத்தில் சிறுநீர் கழித்து, அதை மூன்று பேரும் சேர்ந்து குடிக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த விகாஸ் ஷர்மா தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் இந்த சம்பவம் குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். கடிதம் அடிப்படையில் போலீசார் அந்த மூன்று பேரின் மீதும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல், தற்கொலைக்கு உடந்தை ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!