சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளக்கூடாது: – கமல்ஹாசன்

விஸ்வரூபம் 2 படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் அதனை எதிர்கொள்வதற்கு ஒரு அரசியல்வாதியாக தயாராக இருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல்ஹசானின் விஸ்வரூபம் முதல் பாகத்திற்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. பல்வேறு பிரச்சனைகளை தாண்டி இந்த படம் வெளியானது. இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில்,

கமல் கூறியதாவது, இந்த படத்திற்கு அதிக எதிர்ப்புகள் வராது என நினைக்கிறேன். சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக குழப்பிக்கொள்ளக்கூடாது, படம் வரும்போது படம். அரசியல் வரும்போது அரசியல். இந்த படத்திற்கு எதிர்ப்பு வந்தால் அதனை எதிர்கொள்ள ஒரு அரசியல்வாதியாக தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!