இவரை தவிர என் அம்மாவை வேறு யார் கொன்றிருக்க முடியும்: – தந்தை பற்றி மகன் வாக்குமூலம்

டெல்லியில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த வருடம் மே இரண்டாம் தேதி பர்வீன் ராணா தனது சகோதரருக்கு போன் செய்து தனது மனைவியை கொன்று விட்டதாக கூறியுள்ளார், அதன்பின் பதறிப்போன குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் கழுத்தறுபட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை கைப்பற்றினர். அது பர்வீன் ராணா வின் மனைவி என்கிற நிலையில் ராணாவை கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. குற்றவாளிக்கு ருபாய் 50000 அபராதம் மற்றும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் போது நீதிபதி கூறுகையில் கணவன் மனைவி இருவரிடையில் வாக்குவாதங்கள் நிகழ்ந்தது பற்றி காவல்துறையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரின் குழந்தைகளும் பெற்றோர் இருவரும் சண்டையிடுவது வழக்கம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இவரது மகன் வாக்குமூலம் கூறுகையில் இவரை தவிர என் அம்மாவை வேறு யார் கொன்றிருக்க முடியும் என்று கூறியுள்ளான். மகனின் வாக்குமூலத்தையம் காவல்துறை விசாரணை முடிவையும் அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பை தான் வழங்கியிருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!