இந்திய நிறுவனத்தின் எரிபொருளை புறக்கணிக்க கோருகிறது ஆளும்கட்சி!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகரான டிலான் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார்.

எரிபொருள் விலையை உயர்த்தியுள்ள, லங்கா ஐ.ஓ.சி க்கு பாடம் கற்பிப்பதற்கு இலங்கையில் உள்ள அவர்களின் எரிபொருள் நிலையங்களை புறக்கணிப்பதே ஒரு வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி இந்த வாரம் 92 ஒக்டேன் பெற்றோல் விலையை ரூ. 5 க்கு உயர்த்தியுள்ளது. இதனால் ரூபா 137 ஆக இருந்த ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ரூபா 142 ஆக உயர்ந்துள்ளது. இதனால், அரசுக்கு சொந்தமான பெற்றோலிய நிலையங்களில் எரிபொருளை வாங்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்” என்றும் டிலான் பெரோரா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!