இலங்கை அரசு பொறுப்புக்கூறுவது முக்கியம்! – அமெரிக்கா

இலங்கையில் பொறுப்புக்கூறல் முக்கியமானது என்றும், நீண்டகால உறுதித்தன்மை மற்றும் செழிப்புக்கு இது முக்கியமானது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், நேற்று இணையவழி ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இந்த ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர், அமெரிக்கா- இலங்கை இடையிலான உறவுகளின் வலிமை வெளிப்பட்டது. உடனடி மனிதாபிமான, நீண்டகால மீள் கட்டமைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் வழங்கியது.

இலங்கை அரசாங்கம், நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும். இது நீண்டகால உறுதித்தன்மையையும் செழிப்பையும் வளர்க்கும்.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை பெறுமதியான பங்காளர் என்றும், இலங்கையுடனான உறவுகள் அமெரிக்காவுக்கு முக்கியமானது என்றும் அலிஸ் வெல்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!