நேற்றும் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,048 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், 5 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும், 15 பேர் டுபாயில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,047 பேரில் தற்போது 434 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 604 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 139 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!