5000 ரூபா கொடுப்பனவை தடுக்கவில்லை! – மகிந்த தேசப்பிரிய கூறுகிறார்.

ஜூன் மாதத்துக்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என்று, அரசாங்கத்திடம் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியதாக, வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு ஜூன் மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதால், அந்த கொடுப்பனவை நிறுத்துவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன கூறியிருந்தார்.

எனினும், தாம் அவ்வாறான எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 5000 ரூபா நிவாரணம் வழங்கலில் பிரதேச மற்றும் கிராம உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்றே தாம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் மாதத்திற்கான நிவாரண தொகை வழங்குவதை பரிசீலிக்குமாறும், உண்மையாகவே அவ்வாறு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது குறித்து கரிசனை கொள்ள வேண்டும் என்றுமே, அந்த கடிதத்தின் மூலம் தாம் கோரியதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!