சம்பந்தர் ஐயா ஏன்தான் எங்களை இப்படி ஏமாற்றுகிறீர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக் களுக்குச் செய்கின்ற நெட்டூரம் கொஞ்சமல்ல.

எல்லாவற்றிலும் தமிழ் மக்களை ஏமாற்று வதிலேயே அவர்களின் காலம் கடந்து போகின்றது.

சிலவேளைகளில் இவற்றை நினைக்கும் போதெல்லாம் எங்கள் ஊழ்வினை இப்படியாக வந்துற்றதோ என்று எண்ணத் தோன்றும்.

அந்தளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்றுக் கொடூரம் எல்லைதாண்டிச் செல்கிறது.

சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என் பது முதல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவி டம் ஒப்புதல் பெறுவதற்காக பத்து நிபந்தனை கள் முன்வைத்தது என்ற அறிவித்தல் வரை அனைத்திலும் தமிழ் மக்களை ஏமாற்றுவ தென்றால் இதற்கொரு முடிவே இல்லையா?

இதுபற்றி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களோ அன்றி கூட்டமைப்பின் இதர கட்சியினரோ தட்டிக் கேட்பதற்குத் திராணி அற்றவர்களாக இருக்கின்றனரா? என்பது தான் தெரியாமல் உள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக் கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தபோது அதற்கு எதிராக வாக்களிப்பதற்குக் கூட்டமைப் பினர் பத்து நிபந்தனைகளை முன்வைத்தனர்.

அந்த நிபந்தனையில் பிரதமர் ரணில் விக் கிரமசிங்க கையயழுத்திடுவார் என்றும் கூறப் பட்டது.

பத்து நிபந்தனைகளையும் பிரதமர் ரணில் ஏற்றுக் கொள்வதாலேயே தாம் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் கூறப் பட்டது.

ஆனால் இப்போது பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கையயழுத்திடவில்லை என்றும் அவருடன் ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஐயா! சம்பந்தப் பெருமானே உங்கள் கூட்டமைப்புக்குள் என்னதான் நடக்கிறது என்பதை நீங்களாவது வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படை யில் கட்சியின் அதிகாரங்கள் உங்களிடம் இருக் கிறதா? அல்லது அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழகத்தின் முன் னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா போலத் தான் நீங்களும் இருக்கிறீர்களா? என்பது எமக்குத் தெரியாமலே உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நீங்கள்; இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள்; கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்.

இப்போது எங்கள் கேள்வி நீங்கள் மூவர் மட்டுமாவது சந்தித்து சிந்தித்து ஊடகவியலாளர்கள் மூலமாக மக்களுக்குத் தகவல் சொல்வ தில்லையா? என்பதுதான்.

பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறுவதை நீங் கள் மறுக்கிறீர்கள். மாவை சேனாதிராசா மறுக்கிறார். ஈற்றில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுவதே சரியானதாக அமைந்து விடுகிறது. இவை ஏன்தான் என்று புரிய வில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்தப் பிரபஞ்ச உலகில் தர்மம் தோற்றதாக வரலாறி ல்லை. அதர்மம் வெல்வது போல எழுந்து நின்று ஆடும். அந்த ஆட்டந்தான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைத் தாங்கள் உணர்ந்தால் அதுபோதும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!