கட்டாரில் சிக்கியிருந்த 268 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பினர்!

கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்றுஅதிகாலை 5.04 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்கள் இராணுவத்தின் உதவியுடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!