சமூக ஊடகங்களை தடை செய்ய திட்டம்

அரசாங்கம் சமூக ஊடகங்களை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் சமூக ஊடகங்களை தடைசெய்வதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இதற்கான முயற்சிகளை பல தடவை மேற்கொண்டது ஆனால் மக்களின் எதிர்ப்பால் இது சாத்தியமாகவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தனது நடவடிக்கைகளிற்கு சமூகஊடகங்கள் தடையாகயிருப்பதாக கருதுகின்றது,இதன் காரணமாகவே சமூக ஊடகங்களை தடை செய்ய முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!