மருத்துவர்கள் செய்த தவறால் பலியான பிரித்தானிய பெண்: பிரேத பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

நிமோனியாவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானியப் பெண் ஒருவர் உயிரிழக்க, அவர் எதனால் உயிரிழந்தார் என்ற விடயம் அவரது கணவரிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது. நிமோனியாவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Laura Higginson (30) திடீரென உயிரிழந்துள்ளார். இளம் வயதில் சிறு குழந்தைகளை தவிக்க விட்டு திடீரென மனைவி மறைந்ததால் கடும் சோகத்துக்குள்ளானார் Antony.

Laura இறந்து இரண்டு மாதங்களுக்குப் பின் அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையைக் கோரியுள்ளார் Antony. பிரேதப் பரிசோதனையை பார்த்த பிறகுதான், தன் மனைவிக்கு அதிகமாக பாராசிட்டமால் மருந்து தவறுதலாகக் கொடுக்கப்பட்டதால் அவர் கல்லீரல் செயலிழந்து உயிரிழந்தது Antonyக்கு தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள் அதற்கு முன் அவரிடம் Laura இறந்தது தங்கள் தவறால் என்பதை வெளிப்படுத்தவே இல்லை. பொலிசாரிடம் Antony தனது மனைவி உயிரிழந்ததன் காரணம் மறைக்கப்பட்டது தொடர்பாக புகாரளித்தார். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த Sefton coroner Julie Goulding ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் பொலிசார் விசாரணையைத் தொடங்க உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!