ஜனாதிபதியை மிரட்டி தீர்வைப் பெற முடியாது! – சம்பந்தனுக்கு ரம்புக்வெல பதில்

ஜனாதிபதி கோட்டாபயவை மிரட்டி தீர்வு பெற முயற்சிப்பது பயனற்றது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் புரிந்து கொள்ளவேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அத்துடன் இலங்கை அரசை மீறி சர்வதேசம் எதையும் செய்யமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ தமிழ் தேசிய கூட்டமைப்பை அரவணைத்து பயணிக்கவே அரசு விரும்புகின்றது.ஆனால் கூட்டமைப்பு பழைய நிலையிலேயே இருக்கின்றது. அவர்தமது நிலைப்பாடுகளை தற்காலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். புதிய வழியை தேர்ந்தெடுக்கவேண்டும். அரசுடன் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டும்.

தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்கும்.ஆகால் நாட்டிலுள்ள அனைவரும் ஏற்கும் தீர்வையே வழங்குவோம்.தமிழீழ விடுதலைப்புலிகளின் பாணியில் மிரட்டி தீர்வைக் கேட்பதை கூட்டமைப்பு கைவிடவேண்டும்.

தமிழர்களுக்கு என்ன தீர்வை எப்படி எந்த வேளையில் வழங்குவது என்று அரசுக்குத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேசம் எங்களை கைவிடாது என்று நம்புகிறோம்.தமிழருக்கு ஒரு தீர்வு கிடைப்பதை ஜனாதிபதி கோட்டாபயவினாலும் தடுக்க முடியாது.எவராலும் தடுக்க முடியாது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நேற்றுமுன்தினம் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!