3 நாட்களில் 21 ஆயிரம் கையொப்பங்களை இட்டேன்!

அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர 3 நாட்களில் 21 ஆயிரம் கையொப்பங்களை இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் தாம் மேற்கொண்ட முயற்சிகளை நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விபரித்துள்ளார்.

இதற்காக, சட்டமா அதிபர் வரைந்த ஆவணங்களில் தாம் 21 ஆயிரம் தடவைகள் கைச்சாத்திட்டதாகவும், இதற்கு மூன்று நாட்கள் சென்றதாகவும் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மஹேந்திரனை நியமித்த போது, தாம் அதனை வலுவான முறையில் ஆட்சேபித்ததாக மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஆட்சி அமைத்து, இரு வாரங்களுக்குள் தமக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக அர்ஜூன் மஹேந்திரனின் நியமனத்தை ஏற்கும் நிர்ப்பந்தம் உருவானதாக அவர் மேலும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!