சாவகச்சேரி ஏஎஸ்பிக்கு பிடியாணை வழங்க மறுப்பு; பிணை வழங்கப்பட்டது!

போலி சாட்சிகளை தயாரித்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும் உள்ள சுதத் அஸ்மடலவை கைது செய்ய மறுத்து, பிணை வழங்கி கொழும்பு மஜிஸ்திரேட் இன்று (03) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.

இவரை பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நேற்று முன் தினம் (01) அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக கூறப்படும் விபத்து சம்பவத்தில் போலியான சாட்சியங்களை தயாரிப்பதற்காகவே அவரை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2016ல் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சம்பிக்க ரணவக்க கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.