தமிழக மக்கள் மனதில் தாமரைக்கு இடமில்லை – ஜெயக்குமார்.

தமிழக மக்கள் மனதில் தாமரை, சூரியன், மய்யம் போன்றவற்றிற்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

‘அ.தி.மு.கவை விமர்சனம் செய்பவர்கள் இந்த உலகத்தை உணர்ந்தவர்களாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

தாமரை இல்லாமல் இலை இல்லை என கூறுபவர்கள் கற்பனை உலகத்தில் இருக்கின்றனர். எங்களுக்கு அவர்கள் குறித்து கவலை இல்லை. மக்களுடன் மக்களாக இருந்தால் அவர்கள் என்றைக்கும் அ.தி.மு.கவை ஏற்றுக்கொள்வார்கள் என்பது தான் எங்களின் எண்ணமாக உள்ளது.

இருபத்தியேழு வருடங்ளுக்கு மேலாக அ.தி.மு.க தமிழகத்தை ஆட்சி செய்கிறது. தமிழ்நாட்டில் வருங்காலத்தில் அ.தி.மு.க தான் ஆளும். தாமரை, சூரியன், மய்யம் என எதற்கும் தமிழக மக்கள் மனதில் இடமில்லை.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!