மாற வேண்டியது சிங்கள அரசியல்வாதிகளே – மஹிந்தவுக்கு சுரேஷ் பதில்

சிங்கள அரசுகளின் செயற்பாடு காரணமாகவே தமிழ் மக்கள் தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்தார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் சமஷ்டி தீர்வு ஊடாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தலைவர்கள் தனி நாட்டுக் கோரிக்கை மன நிலையில் இருந்து மாற வேண்டும். அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிரும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

‘இலங்கையில் தனி நாட்டுக் கோரிக்கை 1976ம் ஆண்டுகளிலேயே வந்தது. இந்த தனி நாட்டுக் கோரிக்கை வட்டுக்கோடடை தீர்மானத்தின் ஊடாகவே பிரகடனம் செய்யப்பட்டது. இந்த வட்டுக்கோடடை தீர்மானத்தை தந்தை செல்வநாயகமும் தமிழர் விடுதலைக் கூடடணியுமே கொண்டுவந்தது. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது ஆரம்பகாலத்தில் இருந்த ஏனைய போராட்ட இயக்கங்களோ கோரவில்லை.

ஜனநாயக ரீதியாக போராடிய தமிழ் தலைவர்களே தனிநாட்டுக் கோரிக்கையை கோரினார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு கோரினார்கள் என்பதற்கு பல காரனனங்களும் உண்டு. அன்றைய காலத்தில் இருந்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக செய்து கொள்ளப்படட பல உடன்படிக்கைகளை கிழித்தெறிந்தார்கள்.

குறிப்பாக டட்லி சேனநாயக்க உடன்படிக்கை, பண்டாரநாயக்க ஒப்பந்தம் போன்ற உடன்படிக்கைகளை அப்போது ஆடசியில் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கடசி, ஐக்கிய தேசியக் கடசி இந்த இரண்டு அரசுகளும் கிழித்தெறிந்தனர்.

இலங்கை தமிழர்கள் மீது சிங்கள அரசு திடடமிடட வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரச நிர்வாகத்தில் தனிச் சிங்கள மொழி மட்டுமே பின்பற்றப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டர், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஊடாக சிங்கள மயமாக்கல் இடம்பெற்றது. அதன் ஊடாக தமிழர்களின் காணிகள் பறிக்கப்பட்டு அதில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இதனால் தமிழ் மக்களின் தனித்தன்மை கேள்விக் குறியாகியது. எனவே தமிழர்கள் தமது இறையாண்மையை மீள பெற வேண்டும் என்றே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தனர்.

தமிழர்கள் இந்த நாட்டில் தனி நாட்டுக்கு கோரிக்கையை முன்வைக்க பிரதான காரணம் இலங்கை அரசின் கடும் போக்கே. அதனாலேயே ஈழத்தமிழர்கள் தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்தார்கள். எனவே மாற வேண்டியது தமிழ் மக்களோ தமிழ் அரசியல்வாதிகளோ அல்ல சிங்கள அரசியல்வாதிகளே. இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்களை போன்று சமமாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக மதம், மொழி, கலாசாரம், பழக்க வளக்கங்கள் போன்றவவற்றில் தனித்துவம் பேணப்பட வேண்டும்.

அதற்கு முதலில் இந்த நாட்டில் சமஷ்டி அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். நாடு பிரியக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தமிழ் தலைவர்களின் மனாே நிலை மாற வேண்டும் என்று பிரதமர் மஹிந்த புலம்புவதற்கு முன்னர் ஏன் இந்த நிலைமை வந்தது என்று ஆராய வேண்டும். அதனை தீர்க்க வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இதனை விடுத்து வெறுமனே தமிழ் மக்கள், தமிழ் அரசியல் தலைவர்களின் தனிநாட்டுக் கோரிக்கை மனநிலை மாற வேண்டும் என புலம்புவதில் அர்த்தம் இல்லை.’ – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!