அமெரிக்காவில் கறுப்பினத்தவரை கொன்ற காவலருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை: தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவலர்களுக்கும் கைது!

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜை கழுத்தில் முழங்காலை அழுத்திக்கொலை செய்த பொலிசார் மட்டுமின்றி, அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மூன்று பொலிசாருக்கும் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. முதலில், ஜார்ஜ் கழுத்தில் முழங்காலை அழுத்தி அவர் உயிரிழக்கக் காரணமான Derek Chauvin மீது மூன்றாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது, அவர் மீது இரண்டாம் நிலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மொத்தம் மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர், 40 ஆண்டுகள் வரை சிறையில் செலவிடவேண்டி வரலாம். குற்றவாளியை விட குற்றத்திற்கு துணை போனவர்களுக்கு, அல்லது குற்றத்தை கண்டும் காணாமல் விட்டவர்களுக்கு அதிக தண்டனை வழங்கப்படவேண்டும் என்று கூறுவார்கள்.

அவ்வகையில், Derek ஜார்ஜின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தும்போது அதை தடுக்காமல், ஜார்ஜ் கதறியதை கண்டுகொள்ளாமல் விட்ட மற்ற மூன்று பொலிசாருக்கும் அதே அளவில் தண்டனை அளிக்கப்பட உள்ளது. Thomas Lane, J.A. Kueng மற்றும் Tou Thao என்னும் அந்த மூன்று பொலிசாரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கில் முக்கிய குற்றவாளியான Derekஐப் போலவே மற்ற மூவரும் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை சிறையில் செலவிட இருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!