இறுதிச்சடங்குக்கு சென்ற அமெரிக்க குடும்பத்துக்கு நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவுகில் நடுவானில் ஹெலிகொப்டர் வெடித்து சிதறியதில் குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்தினரும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. புளோரிடா மாகாணத்தின் Williston நகரிலிருந்து இன்டியானா மாகாணத்தின் Newcastle நகருக்கு சென்று கொண்டிருந்த Piper PA31-T Cheyenne twin-engine turbo prop plane-யே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் Larry Ray Pruitt(வயது 67), Shawn Charles Lamont( வயது 41), அவருடைய மனைவி Jody Rae Lamont(வயது 43) மற்றும் மகன்கள் Jayce(வயது 6), Alice(வயது 4) மற்றும் விமானி ஒருவரும் பயணித்துள்ளனர்.

அனைவரும் இறுதிச்சடங்குக்காக சென்று கொண்டிருந்த போது நடுவானில் அட்லான்டாவிலிருந்து 100 மைல் தொலைவில் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக தெரிகிறது. விமானம் தீப்பிடிப்பதற்கு முன்னர் நடுவானில் சுழன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் எரிந்த பாகங்கள் மட்டுமே தரையில் வந்து விழுந்ததாகவும், அதில் பயணித்த ஒருவர் கூட உயிருடன் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலையின் காரணமாகவே விபத்து நடந்திருக்கலாம் என தேசிய பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!