பொலிஸாரே போராட்டத்தை குழப்பகரமாக்கினர் – ரத்ன தேரர்

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அமெரிக்க தூதரகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிஸாரே அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைத்தனர் என்று முன்னாள் எம்பியான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கறுப்பின இளைஞரை பொலிஸார் படுகொலை செய்தமைக்கு எதிராக நேற்று (09) முன்னிலை சோசலிச கட்சி மேற்கொண்ட போராட்டத்தை பொலிஸார் தடுத்தமை தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

‘அமெரிக்க தூதரகத்தின் முன்னாக போராட்டத்தில் ஈடுப்பட வேண்டாம் என நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ள நிiலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டமை முற்றிலும் தவறான செயற்பாடாகும். இருப்பினும் பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பட்சத்தில் ஒரு சில காரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

சுகாதார பாதுகாப்பினை காரணம் காட்டி பேச்சு சுதந்திரம் முடக்கப்படுகின்றது. பொது மக்கள் தங்களின் அரசியல் கருத்துக்களையும், பொது கருத்துக்களையும் சுதந்திரமான குறிப்பிடுவதற்கு அரசாங்கம் தடை விதிக்க முடியாது.

தற்போதைய செயற்பாடுகள் எவ்வாறான நிலைக்கு அடித்தளமிடுகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். அனைத்து காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்தலில் சிறந்த தீர்மானத்தை எடுப்பது அவசியமாகும்.’ – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!