பிசிஆர் சோதனைக்கு இணங்க மறுத்தவர் இராஜதந்திரி அல்ல; இராணுவ அதிகாரி!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த மறுத்தவர் அமெரிக்க இராஜதந்திரி இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“ இராஜதந்திர கடவுச்சீட்டுள்ள- அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த அந்த அதிகாரி இராஜதந்திரி இல்லை. அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்தவர். இந்த தருணத்தில் அவர், வியன்னா பிரகடனத்தை தவறாக பயன்படுத்தி ஏன் இலங்கைக்கு வந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பிட்ட நபர் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த மறுத்தமை பாரதூரமான விடயம் , இதன் மூலம் அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது. இந்த நடவடிக்கையால் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!