சுவிட்சர்லாந்தில் வெடித்துள்ள புதிய போராட்டம்!

சுவிட்சர்லாந்தில் பாஸல் மண்டலத்தில் குறிப்பிட்ட தலைவரின் நினைவுச்சின்னத்தை அகற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண தலைநகர் சாக்ரமென்டோவின் நிறுவன தலைவராக கருதப்படும் Johann August Sutter என்பவரின் சிளையை அகற்ற பாஸல் மண்டலத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொலிசாரால் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் மரணமடைந்த பின்னர் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட கருப்பின மக்களின் போராட்டம் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சுவிஸ் என வியாபித்துள்ளது. கருப்பின மக்களின் உயிரும் முக்கியத்துவம் வாய்ந்ததே என முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம், தற்போது கருப்பின மக்களுக்கு விரோதமாக செயல்பட்ட முக்கிய நபர்களின் சிலைகளை அகற்றும் போராட்டமாகவும் உருவெடுத்துள்ளது.

கடந்த வாரம் பிரிஸ்டலில் அடிமை வர்த்தகர் எட்வர்ட் கோல்ஸ்டனின் நினைவுச்சின்னம் போராட்டக்காரர்களால் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. மட்டுமின்றி பிரித்தானியாவில் இதுபோன்ற சுமார் 60 நினைவுச்சின்னங்களை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பாஸல் மண்டலத்தில் General Sutter என பரவலாக அறியப்படுபவரின் நினைவுச்சின்னத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

General Sutter அமெரிக்காவில் தொழிலாளர்களை பிழிந்து செல்வந்தர் ஆனார் எனவும், அடிமை வியாபாரம் மற்றும் இந்திய சிறார்களை விற்பனை செய்து வருவாய் ஈட்டினார் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!