உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா?- ஓரிரு நாட்களில் முடிவு.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கோரிக்கைக்கமைய, குறித்த பரீட்சையை காலம்தாழ்த்தி நடத்துவதா, என்ற தீர்மானம், இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படுமென, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று ந​டைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், சில மாணவர்கள், தன்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, உயர்தரப் பரீட்சை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள தினத்தை பிற்போடுமாறு கோருவதாகவும் பரீட்சைக்குத் தயாராவதற்கு, தங்களுக்குப் போதுமான காலம் கிடைக்கவில்லை என கூறுவதாகவும் தெரிவித்தார்.

அதனால், உடனடியாகக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்து, மாணவர்கள் பரீட்சைக்கு தயாராவதற்குப் போதுமான காலம் உள்ளதா என்பது தொடர்பாக ஆராய்ந்து, நான்கு நாள்களுக்குள் தனக்கு அறிவிக்க வேண்டுமெனக் கோரியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பாடசாலை மாணவர்கள் தன்னிடத்தில் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது தனது பொறுப்பாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!