லண்டனில் முன்பின் தெரியாத இளைஞனுக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

லண்டனில் பெண்ணை அவர் வீட்டு படுக்கையறையில் கத்திமுனையில் மிரட்டி பலாத்காரம் செய்த இளைஞனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது. Sevdalin Atanasov (32) என்ற துருக்கியில் இருந்து லண்டனுக்கு வந்த இளைஞன் இளம்பெண்ணின் வீட்டில் இரவு தங்கவைக்கப்பட்டுள்ளார். அந்த அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்த இன்னொரு நபரின் பரிந்துரையின் பேரிலேயே அப்பெண் Sevdalin-ஐ தன் வீட்டில் தங்க அனுமதித்தார்.

அப்போது இரவு திடீரென படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்த அப்பெண் கண்விழித்த போது Sevdalin தனது வாயை இறுக்கமாக மூடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் Sevdalin தன்னிடம் இருந்த கத்தியை அப்பெண்ணின் கழுத்தில் வைத்து கொன்றுவிடுவேன் என மிரட்டி அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து தப்பி தனது நண்பர் மூலம் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

புகாரை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் Sevdalin-ஐ கைது செய்தனர். அவர் மீதான வழக்கு Wood Green Crown நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முதலில் தன் மீதான குற்றத்தை Sevdalin மறுத்தார். ஆனால் தாக்குதலுக்கான தடயவியல் சான்றுகள் வழங்கப்பட்ட பின்னர் தன் குற்றத்தை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து குற்றவாளி Sevdalinக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!