கோவிட்-19: பாதிப்பு எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்வு!

கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி வருகிறது. அந்த வகையில் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளான 10,661 பேருடன் சேர்த்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 10,215 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனதை தொடர்ந்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் 1,80,013 உயர்ந்து இருக்கிறது.

இந்த வைரசின் பிடியில் சிக்கி மராட்டியத்தில் 178 பேரும், டெல்லியில் 73 பேரும், தமிழகத்தில் 44 பேரும், குஜராத்தில் 28 பேரும், அரியானாவில் 12 பேரும், மேற்குவங்காளத்தில் 10 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும், மத்தியபிரதேசத்தில் 6 பேரும், ஆந்திரா மற்றும் பஞ்சாபில் தலா 4 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகாவில் தலா 3 பேரும், தெலுங்கானாவில் 2 பேரும், பீகார், சண்டிகார், இமாசலபிரதேசம் மற்றும் கேரளாவில் தலா ஒருவரும் என மொத்தம் 380 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9,900 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 744 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக இருக்கிறது. 42 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி 3-வது இடம் வகிக்கிறது. குஜராத்தில் 24 ஆயிரத்து 55 பேரும், உத்தரபிரதேசத்தில் 13 ஆயிரத்து 615 பேரும், ராஜஸ்தானில் 12 ஆயிரத்து 981 பேரும், மேற்குவங்காளத்தில் 11 ஆயிரத்து 494 பேரும், மத்தியபிரதேசத்தில் 10 ஆயிரத்து 935 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரியானாவில் 7,722, கர்நாடகாவில் 7,213, பீகாரில் 6,650, ஆந்திராவில் 6,456, ஜம்மு காஷ்மீரில் 5,220, தெலுங்கானாவில் 5,193, அசாமில் 4,158, ஒடிசாவில் 4,055, பஞ்சாபில் 3,267, கேரளாவில் 2,543, உத்தரகாண்டில் 1,845, ஜார்கண்டில் 1,763, சத்தீஸ்காரில் 1,756, திரிபுராவில் 1,086, கோவாவில் 592, இமாசலபிரதேசத்தில் 556, லடாக்கில் 555, மணிப்பூரில் 490, சண்டிகாரில் 354, புதுச்சேரியில் 202, நாகாலாந்தில் 177, மிசோரத்தில் 117, அருணாசலபிரதேசத்தில் 91, சிக்கிமில் 68, மேகாலயாவில் 44, அந்தமான் நிகோபர் தீவில் 41, தாதர்நகர் ஹவேலியில் 36 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கொரோனா பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையிலும் மராட்டிய மாநிலமே முதல் இடத்தில் உள்ளது. இந்த வைரசின் கோரப்பிடியில் சிக்கி அங்கு மட்டும் 4,128 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 1,505 பேரும், டெல்லியில் 1,400 பேரும், தமிழகத்தில் 528 பேரும், மேற்குவங்காளத்தில் 485 பேரும், மத்தியபிரதேசத்தில் 465 பேரும், உத்தரபிரதேசத்தில் 399 பேரும், ராஜஸ்தானில் 301 பேரும், தெலுங்கானாவில் 187 பேரும், அரியானாவில் 100 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

கர்நாடகாவில் 89, ஆந்திராவில் 88, பஞ்சாபில் 71, ஜம்மு காஷ்மீரில் 62, பீகாரில் 40, உத்தரகாண்டில் 24, கேரளாவில் 20, ஒடிசாவில் 11, அசாம், ஜார்கண்ட், சத்தீஸ்கார் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா 8, சண்டிகாரில் 6, புதுச்சேரியில் 5, திரிபுரா, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலையில் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!