யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 வாக்காளர்கள்!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வரும் பொதுத் தேர்தலில், வாக்களிப்பதற்கு, 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், 5 இலட்சத்து 64 ஆயிரத்து 714 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இம்முறை 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!