சீன முதியவருக்கு நேர்ந்த கொடுமை: 590 மைல்கள் நடந்தே சென்ற அவலம்!

சீனாவில் கொரோனா தொற்று தமக்கு இல்லை என்பதை நிரூபிக்க முடியாமல் போனதால் முதியவர் ஒருவர் 590 மைல்கள் நடக்க நேர்ந்த கொடுமை வெளியாகியுள்ளது. ஜீ என மட்டும் பெயர் குறிப்பிட்டுள்ள அந்த முதியவர், தமக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை நிரூபிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் செயலியை பயன்படுத்தத் தவறியதால் சுமார் 15 நாட்கள் நடந்தே சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும் குறித்த பயணியைக் கண்ட லொறி சாரதியால் அவரது கதை இணையத்தில் பகிரப்பட்ட பின்னர் அந்த நபரை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த அங்த முதியவர் அண்டை பிராந்தியமான ஜெஜியாங்கிற்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை என்றும், உறவினர்களுடன் தங்கி அங்கு வேலை கிடைக்கும் என்றும் அவர் சென்றுள்ளார். கொரோனா தொடர்பில் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள செயலியை பயன்படுத்தும் மொபைல் அவரிடம் இல்லை என்பதால் பேருந்து பயணத்திற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை.

இதனையடுத்தே அவர் தமது உறவினரை காண சுமார் 600 மைல்கள் நடத்தே செல்ல முயன்றுள்ளார். இவரது பரிதாப நிலையை அறிந்த ஒரு லொறி சாரதி இவரை அந்த உறவினரிடம் சேர்க்க முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் இடம் மாறி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே இச்சம்பவம் இணையத்தில் குறித்த சாரதியால் பகிரப்பட்டு, பல மில்லியன் மக்களின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!