கட்டுநாயக்க, மத்தல விமான நிலையங்களை திறக்க ஏற்பாடு!

கட்டுநாயக்க மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையங்கள் எதிர்வரும், ஓகஸ்ட 1ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளதாக, விமான நிலைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, கட்டுநாயக்க, மத்தல பலாலி போன்ற சர்வதேச விமான நிலையங்கள் ஊடாக, சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட வழக்கமான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்காக, கட்டுநாயக்க மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையங்களை எதிர்வரும், ஓகஸ்ட 1ஆம் திகதி மீளத் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு முன்னதாக, அங்கு 45 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன சொதனைக கருவிகள் பொருத்தப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஜப்பான், அவுஸ்ரேலியா நாடுகளிடம் இருந்து கிடைத்துள்ள நிதியைக் கொண்டு இந்த நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!