புலிகளின் மறுவடிவமே கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் மறுவடிவம் என்று கூறியுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அதனால், புலிகளை அழிக்க உதவிய இந்தியா, கூட்டமைப்புக்கு உதவ முன்வராது என்றும் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் நோக்கில் தொல்பொருள் முகாமைத்துவ செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமைத்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில்தலையிட்டு உதவ வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள உதய கம்மன்பில, 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செயற்படுகின்றது .

அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகராக எந்தக் கட்சிகளும் வடக்கு, கிழக்கில் வளரவில்லை , கூட்டமைப்பினர் ராஜபக்ச அரசை அன்று தொட்டு இன்று வரைக்கும் எதிரியாகவே பார்க்கின்றனர் .

அத்துடன் அரசின் வேலைத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் நிராகரித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில், , புலிகளை அழிக்க உதவிய இந்தியா, கூட்டமைப்புக்கு உதவ முன்வராது .

தமிழ் மக்களின் வரலாற்றையும் இருப்பையும் மாற்றியமைப்பது ஜனாதிபதி செயலணியின் நோக்கம் அல்ல , போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பகுதிகளில் சுதந்திரமாக – மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனவும், இந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!