லண்டனில் பயங்கரம்: இளைஞனின் பொறாமை குணத்தால் அப்பாவி இளைஞனுக்கு நேர்ந்த கதி!

லண்டனில் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டில் உடன் தங்கியிருந்த நபரை பொறாமை குணம் கொண்டு கொலை செய்த இளைஞன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனை சேர்ந்தவர் Carlos Velez (20). இவர் காதலி Ashlly Rondon-Diaz. இந்த நிலையில் Carlos வசித்த அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்த David Martinez என்பவர் Ashlly மீது ஆசைப்படுவதாக Carlos தானாகவே கற்பனை செய்து கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய காதலிக்கு David முத்தம் கொடுத்துவிட்டதாகவும் நினைத்தார். இதெல்லாம் சேர்ந்து Carlos-க்கு David மீது ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் அவருடன் அடிக்கடி சண்டை போட்டார்.

இந்த சூழலில் கடந்தாண்டு மார்ச் 6ஆம் திகதி வீட்டிலேயே வைத்து David-ஐ தலை, கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தி Carlos கொலை செய்தார். இதை தொடர்ந்து Carlos-ஐ பொலிசார் கைது செய்தார்கள். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது வழக்கறிஞர் கூறுகையில், David கொலை செய்யப்பட்ட நாளில் தனது உறவினருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதில், நான் Carlos காதலியை முத்தமிட்டேனா என என்னிடம் கேட்டு அவர் தகராறு செய்கிறார், அவரால் நான் இறக்க நேரிடலாம் என குறிப்பிட்டிருந்தார். இதோடு மிகுந்த பொறாமை குணம் மற்றும் தனக்கு மட்டுமே ஒரு விடயம் சொந்தம் என்ற குணம் கொண்ட Carlos ஒருமுறை தனது காதலியோடு இரயிலில் சென்ற போது நபர் ஒருவர் அவரை பார்த்துள்ளார்.

இதனால் கோபமடைந்த Carlos என் காதலியை நீ எப்படி பார்க்கலாம் என கூறி அவரை அடித்துள்ளார், இதனால் மிகவும் மூர்க்கதனமான குணம் கொண்டவர் Carlos என்பது உறுதியாகிறது என வழக்கறிஞர் கூறினார். இதையெல்லாம் கேட்ட நீதிபதி Carlos அப்பாவி இளைஞனை கொன்றதால் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!