மண்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

இந்தியாவின் கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழைவீழச்சி பதிவாகியுள்ளது..

தொடர் மழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட சில பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் மற்றும் வயலில் பயிரிடப்பட்ட பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் சேதமாகியுள்ளன..

நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானதோடு. மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதனால் 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று அதிகாலை கேரளாவிற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மண்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு. காணாமல் போன 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!