மருத்துவர்களின் அலட்சியத்தால் பலியான 1 வயது சிறுவன்: நாட்டையே உலுக்கிய சம்பவம்!

இந்தியாவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்து போன மகனை கட்டியணைத்து கதறிய தந்தையின் புகைப்படம் வெளியாகி நாட்டையே அதிர வைத்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் எனும் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரேம்சந்த், ஆஷாதேவி. வீங்கிய கழுத்து மற்றும் கடுமையான காய்ச்சலுடன் தங்களது ஒரு வயது மகனை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால் மருத்துவர்களோ குழந்தையை தொடக்கூட மறுத்ததுடன் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளர்.

அவசர உதவி தேவைப்படும் குழந்தையை 90கிமீ தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மிக ஏழ்மை நிலையில் இருந்த பிரேம்சந்த் என்னசெய்வதென்று தெரியாமல் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை கையில் வைத்தபடி கதறியுள்ளார். இதனை அங்கிருந்த பலரும் தங்களது செல்போனில் படமெடுக்க, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கழித்து குழந்தையை ஐசியூவில் சேர்த்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாய் இறந்து போனது, மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை மருத்துள்ள கன்னோஜ் மருத்துவமனையின் உயரதிகாரி, குழந்தையை அழைத்து வந்ததும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம்.

குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்தது, சிகிச்சையளிக்க உரிய அதிகாரியை அவசரமாக அழைத்தோம். குழந்தையை காப்பாற்ற தேவையான சிசிச்சைகளை செய்தோம், ஆனால் 30 நிமிடங்களில் அவன் உயிர் பிரிந்தது, இதில் அலட்சியம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!