க.பொ.த (உ/த) பரீட்சை திகதி குறித்த தீர்மானம் எப்பாேது? – பதிலளித்தார் பந்துல

க.பொ.த (உ/த) பரீட்சை திகதி தொடர்பிலான இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று (02) காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மாணவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதனால் அவசரப்பட்டு எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!