சிறையில் இருக்கும் சசிகலாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால், அங்கிருக்கும் சசிகல கடும் பீதியில் உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 627,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18,225 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தான் நாட்டில் கொரோனாவின் தீவிரம் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், பெங்களூரு பரப்பான அக்ரஹார மத்திய சிறைக்கு புதிதாக வந்த கைதிகள் உட்பட சுமார் 150 பேரின் திரவ மாதிரி, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில், சிறையின் ஆறு ஊழியர்கள், 20 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. சிறையில், 5,000க்கும் அதிகமான ஆண், பெண் கைதிகள் உள்ளனர். நேற்றைய தகவல்படி, ஆண் கைதிகளுக்கு மட்டுமே தொற்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக புதிதாக வரும் கைதிகளை, 21 நாட்கள் தனிமையில் வைத்து, எந்த அறிகுறியும் இல்லை என்றால் மட்டுமே சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் கைதிகளின் சிறைக்குப் பக்கத்தில் தான், சசிகலா உட்பட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், சசிகலா உட்பட அனைவருமே பீதியில் உள்ளனர். அடுத்த மாதம் சிறையில் இருந்து சசிகலா விடுவிக்கப்படுவார் என்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!