பிரித்தானியாவில் திருடப்பட்ட மிகவும் ஆபத்தான விஷம்: பொதுமக்களுக்கு உச்ச எச்சரிக்கை!

பிரித்தானியாவில் வேன் ஒன்றில் இருந்து மிகவும் நச்சுத்தன்மை கொண்ட விஷம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் உச்ச எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வெள்ளை நிற வாகனமானது திங்களன்று லங்காஷயரில் டார்வன் பகுதியில் இருந்து மர்ம நபர்களால் திருடப்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில், பிளாக்லி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் இருந்த மிகவும் ஆபத்தான Talunex என்ற ரசாயனம் மாயமானதை கண்டறிந்துள்ளனர்.

பூச்சிக்கொல்லி மருந்து வகையை சார்ந்த Talunex மிகவும் ஆபத்தான விஷம் என கூறப்படுகிறது. கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை மற்றும் பொது சுகாதார இங்கிலாந்து ஆகியவை தற்போது இச்சம்பவத்தை மிகப் பெரிய விபத்து என அறிவித்துள்ளன. வேனில் இருந்து இந்த அபாயகரமான பொருட்களை அகற்றுவது என்பது நம்பமுடியாதது, இதனாலையே இது ஒரு பெரிய சம்பவமாக தாங்கள் அறிவித்துள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை கண்காணிப்பாளர் ரெபேக்கா பாய்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தவறாக கையாளப்பட்டால் அல்லது சேமித்து வைத்தால், Talunex பொது சுகாதாரத்திற்கு மிகவும் உண்மையான ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த Talunex ரசாயனமானது தொடவோ, நுகரவோ, உட்கொள்ளவோ அல்லது தண்ணீருடன் கலக்கவோ அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!