தொழில் வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி வட்ஸ் அப் மூலம் மோசடி டலஸ் அழகப்பெரும பகுதி 2?

அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் பெயரை பயன்படுத்தி, தொழில் வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி வட்ஸ் அப் மூலம் மோசடி செய்து வந்த ஒருவரை மேல் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாத்தறை – வல்கம பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று மாத்தறை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை முகாமையாளர் பதவியை பெற்றுத்தருமாறு கூறி, தொலைபேசியில் அந்த நபரை தொடர்புக்கொண்ட பொலிஸார் தந்திரமான முறையில் அவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நாபர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் அவரது உறவினர் எனக் கூறி, அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகளை வட்ஸ் அப் மூலம் தொடர்புக் கொண்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!