புதிய மின்கட்டண சலுகைஅறிக்கை நாளை அமைச்சரவையில் முன்வைப்பு- அமைச்சர் மஹிந்த அமரவீர

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்காக விகிதாசார அடிப்படையில் சலுகை வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏனைய தரப்பினர் தொடர்பிலும் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர், அமைச்சரவை அனுமதிக்காக நாளை (08) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

இதேவேளை, மின் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்படும் சலுகை தொடர்பில் இவ் வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!