நினைவுகூரலை தடுப்பது அடிப்படை உரிமை மீறல்! – சந்திரிகா

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறுதலாக நடந்தது என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் 1995ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் 147 பேர் உயிரிழந்தனர்.

யாழ். குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்கள் விமானப் படைக் குண்டு வீச்சில் சாவடைந்திருந்தனர்.

அவர்களை நினைவுகூரு்ம் நிகழ்வுக்கு தடை விதிக்குமாறு கோரி மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர். எனினும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சந்திரிகா சந்திரிகா குமாரதுங்க, “நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் தவறுதலாகவே குண்டு வீச்சு நடத்தினர். விமானப் படையினரின் இலக்காக தேவாலயம் இருக்கவில்லை.அந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதுமே விமானப் படையினரைக் கண்டித்தேன். உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்கக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!