ரக்ஸ் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு மரண தண்டனை – பொலிஸார் நம்பிக்கை!

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய போதைப்பொருள் ஒழிப்பு பணியகப் பொலிஸார் குற்றவாளிகளாக காணப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று நம்புகிறோம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

1979ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்றபோதிலும் எந்தவொரு பொலிஸாரும் குற்றவாளிகளா காணப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு நீதிமன்றில் கோருவோம் என்றும் அவர் கூறினார்.

18 பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளின் இழிவான நடத்தை முழு பொலிஸாரையும் தலைகுனிய வைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!