மாரவிலவில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

சிலாபம், மாரவில பிரதேசத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகரான பெண்ணுடன் நெருங்கிப் பழகியதாக கூறப்படுபவர்களே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் தற்போதைய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 8 ஆலோசகர்களை மீள அழைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மத்திய நிலையமாகும். பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே குறித்த மத்திய நிலையத்தில் நபர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.

எனினும், அங்கிருந்த ஒருவர் எவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானார் என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!