அதிகரிக்கும் கொரோனா தொற்று: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் உக்கிர தாண்டவம் ஆடிய கொரோனா ஐரோப்பிய நாடுகளையும் பதம் பார்த்தது. ஐரோப்பிய நாடுகளில் கணிசமாகக் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், அமெரிக்காவில் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை.

அதேபோல், பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,23,78,780 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,56,599- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 71,82,394- ஆக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!