உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்க்க வேண்டியது முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியே.-புலனாய்வு பிரிவு?

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளை தடுக்க தவறியமைக்கான பொறுப்பை மைத்திரிபால சிறிசேனவும் ரணில்விக்கிரமசிங்கவும் ஏற்கவேண்டும் என தேசிய பாதுகாப்பின் தலைவரின் அலுவலகத்தை சேர்ந்த இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் பலமுறை ஆராயப்பட்ட ஒரு விடயம் குறித்து அப்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியவில்லை என்பது இருவரும் தேசிய பாதுகாப்பு குறித்து சிறிய ஆர்வத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை புலப்படுத்தியுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உறவு பாதிக்கப்பட்டிருந்ததே இதற்கு காரணம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

52 நாட்கள் வேறு அரசாங்கம் காணப்பட்ட பின்னர் இருவருக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்தன என தெரிவித்துள்ள அந்த அதிகாரி பிரதமர் நாட்டில் இல்லாதவேளைகளில் தேசிய பாதுகாப்பு பேரவையின் சந்திப்பு இடம்பெற்றமை இதனை புலப்படுத்தியது என குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபாலசிறிசேன, ரணில்விக்கிரமசிங்கவும், பூஜித் ஜயசுந்தரவும் தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் ஊடாகஅறிவித்தார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தில் தேசியபுலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாகயிருந்த பிரதிபொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் அவ்வேளை பாதுகாப்பு செயலாளர்களாக பதவி வகித்தவர்களிடம் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து எச்சரிக்க முயன்றபோதிலும் அவர்கள் அது குறித்து அக்கறை காட்டவில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிசிரமென்டிஸ் தனது புலனாய்வாளர்கள் தெரிவித்த விடயங்கள் வழங்கிய ஆலோசனைகளை செவிமடுத்தார்,என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு பணியகத்தை சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளரை வாரத்திற்கு ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என அதன் மூலம் விடயங்களை பாதுகாப்பு செயலாளருக்கு தெரிவிக்கலாம் என நாங்கள் சிசிர மென்டிசை கேட்டுக்கொண்டோம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் எங்கள் ஆலோசனையை செவிமடுத்து பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தவர்களை சந்திக்க முயன்றார் ஆனால் அவர்கள் அவரை சந்திக்கவில்லை ஒருவேளை வேலைப்பளு காரணமாகயிருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!